Last Updated : 10 Feb, 2025 06:18 AM

 

Published : 10 Feb 2025 06:18 AM
Last Updated : 10 Feb 2025 06:18 AM

தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு பழநி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து

பழநி: தைப்​பூசத் திருவிழாவையொட்டி பழநி முருகன் கோயி​லில் இன்று (பிப். 10) முதல் வரும் 12-ம் தேதி வரை 3 நாட்​களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்​யப்​பட்டு, அனைவரும் இலவச தரிசனத்​தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

அறுபடை வீடு​களில் மூன்​றாம் படை வீடான பழநி தண்டா​யுத​பாணி சுவாமி கோயி​லின் உப கோயிலான பெரியநாயகி​யம்மன் கோயி​லில் தைப்​பூசத் திரு​விழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்​துடன் தொடங்​கியது. விழா​வின் 6-ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு மேல் திருக்​கல்​யாணம் நடைபெற உள்ளது. இன்று இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்​கோலத்​தில் வெள்​ளித்​தேரில் உலா வருவார்.

விழா​வின் முக்கிய நிகழ்வாக நாளை தைப்​பூசத்​தன்று மாலை நான்கு ரத வீதி​களில் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்​டங்​களில் இருந்து பால்குடம், காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும் ஆயிரக்​கணக்கான பக்தர்கள் பழநி​யில் திரண்டு வருகின்​றனர். இதனால் நகரமே விழாக்​கோலம் பூண்​டுள்​ளது.

வார விடு​முறை நாளான நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்​கோயி​லில் சுவாமி தரிசனத்​துக்கு திரண்​டனர். கட்டணம் மற்றும் பொது தரிசன வரிசை​யில் 3 முதல் 4 மணி நேரம் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர்.

மலையேறும் பக்தர்​களுக்கு சுக்கு காபி, குழந்தை​களுக்கு பால் மற்றும் வரிசை​யில் காத்​திருக்​கும் பக்தர்கள் பசியாறும் வகையில் தேவஸ்​தானம் சார்​பில் பிஸ்கட் பாக்​கெட்டு​கள், தொன்னை​யில் பிரசாதம் வழங்​கப்​பட்​டது.

ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் குறைந்தது 2 மணி நேரம் வரை காத்​திருந்து மலைக்​கோ​யிலுக்கு பக்தர்கள் சென்​றனர். தைப்​பூசத் திரு​விழாவையொட்டி, 3 நாட்​களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்​யப்​படும் என அமைச்சர் பி.கே.சேகர்​பாபு தெரி​வித்​தார். அதன்​படி, இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை விரைவு தரிசனக் கட்டணச் சீட்டு​களான ரூ.20 மற்றும் ரூ.200 ரத்து செய்​யப்​பட்டு, அனைவரும் இலவச தரிசனத்​தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

மேலும், தைப்​பூசத்தை முன்னிட்டு பழநி நகர் மற்றும் புறநகர் பகுதி​யில் 100 காவல் உதவி மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்ளன. ஒரு ஐஜி, 2 டிஐஜி, 5 எஸ்​.பி.க்​கள் தலை​மை​யில் 3,500 போலீ​ஸார் பாது​காப்புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x