Published : 02 Feb 2025 04:00 AM
Last Updated : 02 Feb 2025 04:00 AM
தேனி: மாதாந்திர பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிப்ரவரி 12-ம் தேதி நடைதிறக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, தரிசனத்துக்கான முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 26-ல் மண்டல பூஜை, ஜனவரி 14-ல் மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 20-ம் தேதி நடை சாத்தப்பட்டது. அதையடுத்து, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் சாவியை பந்தளம் மன்னர் பிநிதிநிதிகளிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், மாதாந்திர பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். இதன்படி, மாதாந்திர பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவுகள், கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT