Published : 20 Jan 2025 05:55 AM
Last Updated : 20 Jan 2025 05:55 AM
சென்னை: சென்னை இஸ்கான் கோயிலில் மதுர மகோத்சவ கீர்த்தன் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் பிரசித்தி பெற்ற இஸ்கான் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக மதுர மகோத்சவ கீர்த்தன் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு மதுர மகோத்சவ கீர்த்தன் விழா கடந்த 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதியுடன் (நேற்று) நிறைவடைந்தது.
3 நாட்களும் தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புகழ்பெற்ற கீர்த்தனையர்களின் தலைமையில் கிருஷ்ணரின் திருநாமங்கள் பாடப்பட்டது. மேலும், இந்த கீர்த்தன் திருவிழாவில் மூத்த சந்நியாசிகளும் மற்றும் பல பக்தர்களும் இணைந்து கிருஷ்ணரின் திருநாமங்களையும், ஆன்மீக பாடல்களையும் பாடினர்.
விழா நடைபெற்ற 3 நாட்களில், குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், முதியவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் கீர்த்தனைகள் பாடியும், நடனமாடியும் விழாவை கொண்டாடினர். மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயிலில் பிரசாதம் தயாரிக்கப்பட்டு நாள் முழுவதும் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT