Last Updated : 30 Oct, 2024 01:50 PM

 

Published : 30 Oct 2024 01:50 PM
Last Updated : 30 Oct 2024 01:50 PM

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை ஆதீனங்கள் வாழ்த்து

ஆதீனங்கள்

கோவை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவையைச் சேர்ந்த ஆதீனங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை நாளை (31 ஆம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவையைச் சேர்ந்த ஆதீனங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கோவை சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தீபங்களின் வரிசை தீபாவளி. குறிப்பாக, தமிழர்கள் கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று, அதற்கு முன்பு ஒருநாள், அதற்கு பின்னர் ஒருநாள் தீபங்களை வீடுகளில் ஏற்றி வைத்துக் கொண்டாடுவதே தீபாவளி.

பிற்காலத்தில் ஐப்பசி மாதத்தில் வரும் சதுர்த்தி நாளில், உலக மக்களுக்கெல்லாம் துன்பத்தை விளைவித்த நரகாசுரனை அழித்த நாளை நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம். நம் முன்னோர்கள் கார்த்திகை மாதம் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுவது தீபாவளியாக இருந்ததாக நம் இலக்கியங்கள் நமக்கு கூறுகின்றன.

உள்ளத்தில் இருக்கின்ற அறியாமை இருளை நீக்கி நமக்கு நல்ல அருளை தருவது இறைவனுடைய திருவருள் ஆகும். இந்தாண்டு நாம் இறைவனை வேண்டிக் கொள்வது உலகிலேயே பல்வேறு நாடுகளில் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

இந்த போர்ச்சூழல் நீங்கி அனைத்து மக்களும் மகிழ்வோடு வாழ நாம் இறைவனை வேண்டிக் கொள்வோம். விரைவில் ஓர் அச்சமானது நீங்க வேண்டும். எல்லோருடைய வாழ்விழும், ஒளி நிறைந்த வாழ்க்கை அமைய வேண்டும் என இறைவனை நாம் இந்நேரத்தில் வேண்டிக் கொள்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தீபாவளி எனும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள், மக்கள் மனநிறைவைக் கொள்ளும் பெருநாள் ஐப்பசி மாதத்தில் உலக மக்கள் கொண்டாடப்படும் இத்திருநாள் தீபாவளி நாள். தீமையை செய்து மக்களுக்கும், தேவர்களுக்கும் துன்பம் கொடுத்த நரகாசுரனை தேவர்கள் அழித்து, மக்களும், தேவர்களும் மகிழ்ந்த நாளாக தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

இதில் இன்னும் பல நம்பிக்கை கதைகள் உண்டு. இதை கதையாக சொல்லிக் கொண்டு இருக்காமல் நமக்குள் இருக்கும் நரகாசுரனயாகிய கொலை, களவு, பஞ்சபாதகம், பொய், தீண்டாமை, புலால் உணவு, மது, உழைக்காமல் உண்பது, கணவனை அவமதிப்பது, மனைவியை கொடுமை செய்வது பெற்றோர் சொல் மீறுவது, அதிக உறக்கம் இதுபோன்ற இன்னும் மனித வளர்ச்சிக்கு தீங்கு செய்யும் அரக்கர்களை அழித்து, எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை அணிந்து இனிப்புகள் உண்டு, பிறருக்கு மனித நேயத்தை காட்டி, நம்மிடம் இருக்கும் இருளை நீக்கி ஒளி ஏற்றி மன நிறைவுடன் வாழ இறைவனை வேண்டுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x