Published : 26 Feb 2024 04:10 AM
Last Updated : 26 Feb 2024 04:10 AM

கீழ்பென்னாத்தூர் - கல்பூண்டி வெட்காளியம்மன் கோயிலில் வளைகாப்பு வழிபாடு

கீழ்பென்னாத்தூர் அடுத்த கல்பூண்டி கிராமத்தில் வெட்காளியம்மன் கோயிலில் நடைபெற்ற வளைகாப்பு வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கல்பூண்டி கிராமத்தில் வெட்காளியம்மன் கோயிலில் வளைகாப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.

இதையொட்டி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலைகள், எலுமிச்சை மாலைகள் அணிவித்து அலங் கரிக்கப்பட்டன. பின்னர், அம்மனுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பல்வேறு இனிப்புகள் என 500 தட்டுகளை மேளதாளம் முழங்க பிரம்மாண்ட ஊர்வலமாகக் கிராம மக்கள் எடுத்து வந்து அம்மனுக்குச் சீர்வரிசையாக வைத்தனர். தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், அதர்வண பத்ரகாளி ஹோமம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து வளையல் மாலை அணிவித்து வளைகாப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்குப் பிரசாதம் வைக்கப்பட்டது. அண்ணா மலையார் நாடக சபாவினரால் தெய்வீகத் தெருக்கூத்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ல சந்துரு சுவாமிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x