Published : 17 Dec 2023 05:37 AM
Last Updated : 17 Dec 2023 05:37 AM
திருச்சி: திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து மார்கழி மாத சீர்வரிசைப் பொருட்கள் நேற்று இரவு வழங்கப்பட்டன.
சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோர் ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு சகோதரிகள் என்ற முறையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து ஆண்டுதோறும் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு, ரங்கநாதர் கோயிலிலிருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கலப் பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை யானை மீது வைத்து, மங்கல வாத்தியங்கள் முழங்க,வாணவேடிக்கையுடன் கோயில்இணை ஆணையர் செ.மாரியப்பன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோயில் ஊழியர்கள் ஆகியோர் திருவானைக்காவல் கோயிலுக்கு நேற்று எடுத்து வந்தனர்.
திருவானைக்காவல் கோயிலில் உதவி ஆணையர் ஆ.ரவிச்சந்திரன் தலைமையிலான கோயில் ஊழியர்கள், கொடிமரம் முன்பு சீர்வரிசைப் பொருட்களை பெற்றுக் கொண்டனர். இந்த சீர்வரிசைப் பொருட்கள் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, நிவேதனம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்.
மேலும், ரங்கம் ரங்கநாதர் கோயில் வஸ்திரங்கள் ஜம்புகேஸ்வரரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சாற்றப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT