Published : 26 Dec 2019 12:59 PM
Last Updated : 26 Dec 2019 12:59 PM
நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8 மணிக்குத் தொடங்கி உலகின் பல இடங்களில் தெரிந்தது.
இந்தியாவில் சூரிய கிரகணம் காலை 9 மணிக்கு மேல் தெரியத் தொடங்கியது.
இந்நிலையில் பிரதமர் மோடி சூரிய கிரகணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்தியர்கள் பலரைப் போல மேகமூட்டத்தால் என்னால் சூரிய கிரகணத்தை[ப் பார்க்க முடியவில்லை'' என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணாடியில் பார்க்கும் புகைப்படத்துடன் மூன்று புகைப்படங்களை மோடி பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் Gappistan Radio என்ற ட்விட்டர் பக்கம், மோடி கண்ணாடி அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, ''உங்கள் புகைப்படம் மீம் ஆக மாறி வருகிறது'' என்று பதிவிட்டிருந்தது.
ட்வீட்டை பிரதமர் மோடி குறிப்பிட்டு, ''மிகவும் வரவேற்கிறோம் .... மகிழுங்கள்'' என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் கூலஸ்ட் பிரதமர் என்று பதிவிட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT