Published : 10 Dec 2019 03:28 PM
Last Updated : 10 Dec 2019 03:28 PM

2019-ல் ட்விட்டரில் அதிகம் குறிப்பிடப்பட்ட அரசியல் தலைவர்கள் விவரம்

2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் அதிக அளவு குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

ட்விட்டர் இந்தியா #ThisHappened2019 என்ற ஹேஷ்டேக்கில் 2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் நடந்த சாதனைப் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.

அதில் பொழுதுபோக்கு, அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைகளில் உள்ள பிரபலங்கள் (லைக், ரீட்விட், ட்வீட், கமெண்ட், ரசிகர்களுடான உரையாடல்) பலரது சாதனைகள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் ட்விட்டரில் அதிக அளவு குறிப்பிடப்பட்ட முதல் 10 தலைவர்களின் (ஆண், பெண்) பெயரை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

அதில் பெண் அரசியல் தலைவர்களில், ஸ்மிருந்தி இரானிக்கு முதலிடமும், பிரியங்கா காந்தி இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது. இவர்களை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சிதாராமன், மம்தா பனர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளன.

தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடமும் , காங்கிரஸின் ராகுல் காந்திக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது. இவர்களை தொடர்ந்து அமித் ஷா, அர்விந்த் கேஜ்ரிவால், யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x