Published : 08 Oct 2019 12:20 PM
Last Updated : 08 Oct 2019 12:20 PM
தமிழில் தேசிய கீதத்தைப் பாடும் பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிகள் உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மன பாடல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இதை எழுதினார். சுமார் 52 வினாடிகள் பாடப்படும் தேசிய கீதம், மத்திய, மாநில அரசு விழாக்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் பாடப்படுகிறது.
இந்நிலையில், அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர், வகுப்பறையில் தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்துப் பாடுகிறார்.
''இனங்களும் மொழிகளும் ஆயிரம் இருந்தும், மனங்களில் பாரதத் தாயே...
வடக்கே விரிந்த தேசாபிமானம், தெற்கே குமரியில் ஒலிக்கும்.
இன, மத வேற்றுமை உடையில் இருந்தும் இதயத்தில் ஒற்றுமை பொங்கும்...!'' எனப் பாடல் நீள்கிறது.
இனிமையாக குரலில் அவர் பாடியதற்குப் பிறகு மாணவிகளும் பாடுகின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆசிரியரின் முயற்சிக்குப் பாராட்டுகள் குவிந்தாலும் தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்துப் பாடுவது தவறு என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவைக் காண
தேசிய கீதத்தை தமிழில் பாடி அசத்திய ஆசிரியை மற்றும் மாணவிகள்.
— AMVI. D. Srinivasa Thilak (@srinivasathilak) October 7, 2019
வாழ்த்துக்கள்...... @mafoikprajan @rcdeenadayalan @sumanthraman @ranganaathan @NameisKamal @VTTPrabhu @dhanyarajendran @AnbuCoimbatore pic.twitter.com/a7xqEQsAC5
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT