Published : 29 May 2023 07:00 PM
Last Updated : 29 May 2023 07:00 PM
மலையாளத்தில் உச்சபட்ச வசூல் சாதனையை படைத்து வரும் டோவினோ தாமஸின் ‘2018’ திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் மலையாளத்தில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை ரூ.160 கோடி வசூலை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் தமிழ், தெலுங்கில் படம் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படம் வரும் ஜூன் 7-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாசிக்க> 2018 (Everyone is a Hero) திரைப் பார்வை: பேரிடரில் துளிர்க்கும் பேரன்பும், அட்டகாசமான திரை அனுபவமும்!
ഒന്നിച്ച് കരകയറിയ ഒരു ദുരന്തത്തിൻ്റെ കഥ!
— Sony LIV (@SonyLIV) May 29, 2023
The biggest blockbuster Mollywood has ever seen is now coming to Sony LIV
2018, streaming on Sony LIV from June 7th#SonyLIV #2018OnSonyLIV #BiggestBlockbuster #BasedOnTrueStory
@ttovino #JudeAnthanyJoseph @Aparnabala2 #kavyafilmcompany pic.twitter.com/9UzcYSPz1j
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT