‘கலகத் தலைவன்’ முதல் ‘அனல் மேலே பனித்துளி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘கலகத் தலைவன்’ முதல் ‘அனல் மேலே பனித்துளி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ் - தமிழ்: உதயநிதி ஸ்டலானின் ‘கலகத் தலைவன்’, சசிகுமாரின் ‘நான் மிருகமாய் மாற’, கதிர், நரேன், நட்டி நட்ராஜ் நடித்துள்ள ‘யூகி’, அஸ்வின்குமாரின் ‘செம்பி’,
சதீஷ்ராமகிருஷ்ணனின் ‘2323 The Beginning’ உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

மலையாளம்: அர்ஜூ வர்கீஸின் ‘விவாஹ ஆவாஹனம்’ (Vivaha Avahanam)

இந்தி: அஜய்தேவ்கன், தபு நடித்துள்ள ‘த்ரிஷ்யம் 2’ (Drishyam 2) படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: ஆன்ட்ரியாவின் ‘அனல் மேலே பனித்துளி’ சோனி லைவ் ஓடிடியில் நாளை (நவம்பர் 18) வெளியாகிறது. அஞ்சலி மேனனின், ‘வொன்டர்வுமன்’ (Wonder Women) சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: கார்த்தியின் ‘சர்தார்’ ஆஹா ஓடிடி தளத்தில் நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ நவம்பர் 19-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. ஐஸ்வர்யா லக்சுமியின் ‘குமாரி’ மலையாள படம் நவம்பர் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட உள்ளது.

இணையதள தொடர்கள்: ‘தி சாண்ட க்ளாஸ்’ (The Santa Clauses) ஆங்கில தொடர் ஹாட்ஸ்டாரில் நவம்பர் 16-ம் தேதி வெளியாகியுள்ளது. ‘டெட் டு மீ’ (Dead to Me S3) ஆங்கில தொடர் நெட்ஃப்ளிக்ஸ் நவம்பர் 17-ல் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு தொடரான ‘ஆஹா நா பெல்லன்தா’ (Aha Na Pellanta) ஜீ5 தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x