நவ.25-ல் ஓடிடியில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’


நவ.25-ல் ஓடிடியில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் நவம்பர் 25-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'பிரின்ஸ்'. இதில் உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்திருந்தார். சத்யராஜ், பிரேம்ஜி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட இப்படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், படம் வரும் நவம்பர் 25-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x