நவம்பர் 4-ம் தேதி ஓடிடி தளங்களில் சில முக்கியமான படங்களும் வெப்சீரிஸும் வெளியாக உள்ளது. அது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
பொன்னியின் செல்வன் பாகம் 1: மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் நாவலை தழுவி உருவான 'பொன்னியின் செல்வன்' கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். உலக அளவில் ரூ.500 கோடியை வசூலித்துள்ள இப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வாடகை முறையில் ரூ.199 செலுத்தி காண முடியும். இதுவரை நவம்பர் 4-ம் தேதி வழக்கமான சந்தாதாரர்களால் எந்தவித கட்டணமும் இல்லாமல் படத்தை பார்க்க முடியும்.
பிரம்மாஸ்திரா பாகம் 1: அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியான படம் 'பிரம்மாஸ்திரா'. அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜூனா, மௌனி ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய இப்படம் இந்தாண்டு பாலிவுட் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், படம் வரும் நவம்பர் 4-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கையும் களவும்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரோஜூ இயக்கத்தில் உருவாகியுள்ள இணையதள தொடர் 'கையும் களவும்'. சஞ்சனா நடராஜன், மடோனா செபாஸ்டியன், ரம்யா நம்பீசன், செந்தில், கரு.பழனியப்பன், விவேக் பிரசன்னா, விஜய் ஆதிராஜ், உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்துள்ள இந்த வெப்சீரஸ் நவம்பர் 4-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தவிர்த்து, நாகர்ஜூனா நடிப்பில் உருவான 'தி கோஸ்ட்' திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.
WRITE A COMMENT