ரன்பீர்கபூர் - ஆலியா பட் நடிப்பில் உருவான 'பிரம்மாஸ்திரா' படம் வரும் நவம்பர் 4-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன்முகர்ஜி உள்ளிட்டோர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் 4 ஆண்டுகள் படமாக்கப்பட்டது. ஷாருக்கான், அமிதா பச்சன், நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படத்திற்கு ப்ரித்தம் இசையமைத்திருந்தார்.
சுமார் ரூ.410 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் உலகம் முழுக்க ரூ.430 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் நவம்பர் 4-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT