‘பிரின்ஸ்’ முதல் ‘பேட்டைக்காளி’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘பிரின்ஸ்’ முதல் ‘பேட்டைக்காளி’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' திரைப்படமும், கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' திரைப்படும் நாளை (அக்டோபர்21) திரையரங்குகளில் வெளியாகிறது. மோகன்லால் நடித்துள்ள மலையாள படமான 'மான்ஸ்டர்' நாளை வெளியாகிறது. நிவின் பாலி, அதிதி பாலன் நடித்துள்ள 'படவெட்டோ' மலையாள படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம். விஷ்ணுமஞ்சு, சன்னி லியோன் நடித்துள்ள தெலுங்கு படமான 'ஜின்னா' படம் நாளை வெளியாக உள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: அம்பிகா, சின்னி ஜெயந்த், மனோபாலா நடிப்பில் உருவான 'சூப்பர் சீனியர் ஹீரோக்கள்' நெட்ஃப்ளிக்ஸில் நாளை வெளியாகிறது. 'அப்னா வில்லா' படம் ஹாட்ஸ்டாரிலும், 'தி ஸ்டேரேஞ்சர்' படம் நெட்ஃப்ளிக்ஸிலும் காணக்கிடைக்கிறது. ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவான 'அம்மு' தெலுங்கு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் அக்டோபர் 19-ம் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஷர்வான்ந்த் நடிப்பில் வெளியான 'கணம்' படம் ஆஹா ஓடிடியில் தற்போது (அக்டோபர் 20) காணக்கிடைக்கிறது.நாகா சௌர்யா, ஷெர்லி நடித்துள்ள 'கிருஷ்ணா விருந்தா விஹாரி' திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் 'பிம்பிசார' தெலுங்கு படம் ஜீ5 ஓடிடியில் அக்டோபர் 21-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இணையதள தொடர்கள்: கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி நடித்துள்ள 'பேட்டைக்காளி' ஆஹா ஓடிடியில் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x