தீபாவளி திருநாளையொட்டி ஓடிடி தளத்தில் முக்கியமான சில படங்கள் வெளியாகவுள்ளன. அந்தப் படங்கள் குறித்து பார்ப்போம்.
- கணம்: ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் ஷர்வானந்த், ரிது வர்மா, அமலா, ரமேஷ் சதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வெளியான படம் 'கணம்'. இப்படம் வரும் அக்டோபர் 20-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிரம்மாஸ்திரா: அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியாபட், அமித்தா பச்சன், நாகர்ஜூனா, ஷாருக்கான் நடித்துள்ள படம் 'பிரம்மாஸ்திரா'. இப்படம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலை ஈட்டியுள்ள இப்படம் அக்டோபர் 23-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
- பேட்டைக்காளி: ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவத்தை அடிப்படையாக கொண்டு கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி, ஷீலா நடிப்பில் உருவாகியுள்ள தொடர் 'பேட்டைக்காளி'. ராஜ்குமார் இயக்கும் இந்தத் தொடரை இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்தத் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி வெளியாக உள்ளது.
- கிருஷ்ணா விருந்தா விஹாரி (Krishna Vrinda Vihari): அன்னிஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நாகா சௌர்யா, ஷெர்லி நடித்துள்ள 'கிருஷ்ணா விருந்தா விஹாரி' திரைப்படம் அக்படோபர் 23-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
இவை தவிர்த்து, அண்மையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'நானே வருவேன்' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27-ம் தேதி வெளியாகிறது.
WRITE A COMMENT