‘ஜுராசிக் வோர்ல்ட்’ திரைப்படங்களில் ஒன்றாக உருவான ‘ஜுராசிக் வோர்ல்ட் டொமினியன்’ திரைப்படம் அக்டோபர் 17-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஜுராசிக் வகைத் திரைப்படங்களுக்கென தனி பார்வையாளர்கள் உண்டு. முதன்முதலில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் டைனோசர்களைப் பற்றி புதிய பார்வையைத் அளித்தது. இது 'ஜுராசிக் பார்க்' வகையறா படங்களின் பாகங்கள் தனித்தனியே வெளியான நிலையில், ‘ஜுராசிக் வோர்ல்ட் டொமினியன்’ படம் கடந்த ஜூன் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கொலின் ட்ரெவோரோ இயக்கியிருந்த இப்படத்தில் கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், சாம் நெய்ல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், அக்டோடபர் 17-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT