இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆற்றல்' மற்றும் வினோத் லோகிதாஸ் நடித்துள்ள 'சஞ்சீவன்' திரைப்படங்கள் நாளை (அக்டோபர் 14-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா' தமிழில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி வெளியாகிறது. அதேபோல, சிரஞ்சீவியின் 'காட் ஃபாதர்' திரைப்படம் (அக்டோபர் 14) நாளை முதல் தமிழ்நாட்டில் வெளியாகிறது. ஆயுஷ்மான் குர்ரானா, ரகுல்பிரித் சிங் நடித்துள்ள 'டாக்டர் ஜி' திரைப்படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம்.
நேரடி ஓடிடி ரிலீஸ்: சாம் மக்ரோனி இயக்கியுள்ள 'ப்ளாக் அவுட்' (Blackout) திரைப்படம் அக்டோபர் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சிம்பு நடிப்பில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் இன்று (அக்டோபர்13) அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. வைபவ் நடித்துள்ள 'பபூன்' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும், அதர்வா நடித்துள்ள 'ட்ரிக்கர்' திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும் நாளை (அக்டோபர் 14-ம் தேதி) வெளியாகிறது. அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள 'டோபாரா' நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. பாசில் ஜோசப், திலேஷ் போத்தன் நடித்துள்ள 'பல்து ஜான்வர்' (Palthu Janwar) மலையாள படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாக உள்ளது.
இணையதள தொடர்கள்: ‘மிஸ்மேட்ச் சீசன் 2’ ஹிந்தி தொடர் நெட்ஃப்ளிக்ஸில் அக்டோபர் 14-ம் தேதி வெளியிடபட உள்ளது.
WRITE A COMMENT