அக்.13-ல் ஓடிடியில் வெளியாகிறது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’


அக்.13-ல் ஓடிடியில் வெளியாகிறது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’

சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அக்டோபர் 13-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். சித்தி இதானி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அவருடன் மலையாள நடிகர் சித்திக், நீரஜ் மாதவ், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.60 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் வரும் அக்டோபர் 13-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x