அக்.15-ல் ஓடிடியில் வெளியாகிறது அனுராக் காஷ்யபின் ‘டோபாரா’


அக்.15-ல் ஓடிடியில் வெளியாகிறது அனுராக் காஷ்யபின் ‘டோபாரா’

அனுராக் காஷ்யபின் 'டோபாரா' திரைப்படம் வரும் அக்டோபர் 15-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டோபாரா'. ஷோபா கபூர், ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு கவுரவ் சேட்டர்ஜி இசையமைத்திருந்தார். ரூ.30 கோடியில் பாலிவுட்டில் உருவான இப்படம், சமூக வலைதளங்களில் 'பாய்காட் டோபாரா' ட்ரெண்டை எதிர்கொண்டதால் படத்திற்கான வரவேற்பு குறைந்தது.

படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் எழுந்தபோதிலும், பாக்ஸ் ஆபீஸில் படம் வெறும் ரூ.10 கோடியைக்கூட ஈட்டவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், படம் வரும் அக்டோபர் 15-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x