செப்.28-ல் ஓடிடியில் வெளியாகிறது விக்ரமின் ‘கோப்ரா’


செப்.28-ல் ஓடிடியில் வெளியாகிறது விக்ரமின் ‘கோப்ரா’

விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் ‘கோப்ரா’. ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் ஸ்ரீனிதி ஷெட்டி நாயகியாக நடித்திருந்தார். தவிர இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிருனாளினி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை லலித்குமார் தயாரித்திருந்தார்.

ரூ.100 கோடி பட்ஜெட்டில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாத காரணத்தால் ரூ.83 கோடி மட்டுமே வசூலித்தது. படத்தின் நேரம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதில் 20 நிமிடங்களை படக்குழு குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படம் செப்டம்பர் 28-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x