தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்பபடம் இம்மாதம் 23-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 'திருச்சிற்றம்பலம்'. கடந்த ஆகஸ்ட் 18-ம் திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், ராஷிகண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, ரூ.130 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், தற்போது படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 23-ம் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் 'திருச்சிற்றம்பலம்' வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The most anticipated #Thiruchitrambalam streaming worldwide from Sept 23rd only on #SunNXT! Watch it in 4K and Dolby Atmos!#ThiruchitrambalamOnSunNXT@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @JoinPrakashRaj @MithranRJawahar @priya_Bshankar #NithyaMenen #RaashiiKhanna pic.twitter.com/pGUNchjN9j
— SUN NXT (@sunnxt) September 19, 2022
WRITE A COMMENT