‘வெ.த.கா’ முதல் ‘தள்ளுமாலா’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘வெ.த.கா’ முதல் ‘தள்ளுமாலா’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: இந்த வாரம் திரையரங்குகளில், 'சிம்புவின் வெந்து தணிந்தது காடு' நேற்று (செப்டம்பர் 15) வெளியானது. அருண் விஜய் நடித்த 'சினம்' இன்று வெளியாகியுள்ளது. தவிர, மலையாளத்தில் 'இனி உதாரம்' (Ini Utharam), 'கொத்து' (Kotthu),படங்களும் தெலுங்கில் 'சாகினி டாகினி' (Saakini Daakini), இந்தியில் 'ஜஹான் சார் யார்' (Jahaan Chaar Yaar) உள்ளிட்ட படங்கள் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ளன.

நேரடி ஓடிடி ரிலீஸ்: துருவா இயக்கி நடிக்கும் 'கேரோசின்' (Kerosene) தெலுங்கி திரைப்படம் ஆஹா ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது. 1980 காலக்கட்டத்தை மையமாக கொண்ட 3 இளைஞர்களின் கதையான 'ஜோகி' ( Jogi) இந்தி படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. தவிர 'குட் நைட் மம்மி' (Good Night Mommy) ஹாலிவுட் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று காண முடியும்.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ரவி தேஜா, ரஜிஷா விஜயன் நடித்துள்ள 'ராமாராவ் ஆன் டியூட்டி' (Ramarao on Duty) படம் சோனி லிவ் ஓடிடியில் நேற்று (செப்டம்பர் 15) வெளியானது. ஜித்தின் இஷாக் தாமஸின் 'அட்டேன்ஷன் ப்ளீஸ்' (Attention Please) மலையாள படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. டோவினோ தாமஸின் 'தள்ளுமாலா' நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இணையதள தொடர்கள்: 'ஹார்ட் ப்ரேக் ஹை' (Heartbreak High) ஹாலிவுட் இணையதள தொடர் செப்டம்பர்14-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும், 'தான்' (Dahan) தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடியில் செப்டம்பர் 15-ம் தேதியான நேற்றும் வெளியாகியுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x