இந்திய புராணக் கதையான மகாபாரதத்தைத் தொடராக எடுக்க இருப்பதாக, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. டிஸ்னியின் டி23 எக்ஸ்போ அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றது. அதில் டிஸ்னி தயாரிக்க இருக்கும் 3 பிரம்மாண்ட தொடர்களின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் மகாபாரதமும் இடம்பெற்றுள்ளது. இந்திப் பட தயாரிப்பாளரான மது மந்தேனா மற்றும் அல்லு என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து இந்த தொடரை டிஸ்னி தயாரிக்கிறது.
இதுபற்றி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் தலைவர் கவுரவ் பானர்ஜி கூறும்போது, இந்தத் தொடர் மிகவும் பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும். இந்த இதிகாசக் கதையை அடுத்த ஆண்டு, உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு வருவது உண்மையில் பாக்கியமாக இருக்கும் என்றார். தயாரிப்பாளர் மது மந்தேனா கூறும்போது, மகாபாரதம் பழமையானது என்றாலும் இன்றும் வாழ்வியலுக்கு ஏற்ற பல கருத்துகள் அதில் இருக்கிறது. அதைத் தயாரிப்பதில் டிஸ்னி பெருமை கொள்கிறது என்றார்.
WRITE A COMMENT