‘கணம்’ முதல் ‘பிரம்மாஸ்திரா’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘கணம்’ முதல் ‘பிரம்மாஸ்திரா’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கேப்டன்' திரைப்படம் (செப்டம்பர் 8) இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷ்ராவந்த் நடித்துள்ள ‘கணம்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாகிறது. ரன்வீர் சிங் கபூர் நடித்துள்ள 'பிரம்மாஸ்திரா' இந்தி திரைப்படத்தை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம். 'ஒட்டு', 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்', 'பத்தொன்பது நூற்றாண்டு' ஆகிய மலையாள திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.

நேரடி ஓடிடி ரிலீஸ்: சுமந்த் அஸ்வின் நடித்துள்ள '7 டேஸ், 6 நைட்ஸ்' (7 Days 6 Nights) தெலுங்கு படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. ராபர்ட் ஜெமெக்கிஸ் இயக்கியுள்ள 'பினோச்சியோ' (Pinocchio) அனிமேஷன் திரைப்படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: கார்த்தி நடித்துள்ள 'விருமன்' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 11-ம் தேதி வெளியாகிறது. துல்கர் சல்மானின் சீதா ராமம் படத்தை செப்டம்பர் 9-ம் தேதியான நாளை அமேசான் ப்ரைமில் ஓடிடியில் காணலாம்.

குஞ்சாக போபன் நடித்துள்ள 'ன்னா தான் கேஸ் கொடு' (Nna, Thaan Case Kodu) மலையாள படம் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. டோவினோ தாமஸின் 'தள்ளுமாலா' (Thallumaala) நெட்ஃப்ளிக்ஸில் செப்டம்பர் 11-ம் தேதி வெளியாகிறது.

வெப் சீரிஸ்: 'ரிக் அன் மார்டி' (Rick and Morty S6) (English) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகியுள்ளது. 'கோப்ரா கை' (Cobra Kai S5 (English))நெட்ஃப்ளிக்ஸில் இன்று வெளியாகியுள்ளது. 'ஒன்ஸ் அபான் ஏ ஸ்மால் டவுன்' வெப் சீரிஸை தற்போது நெட்ஃப்ளிக்ஸில் காண முடியும்.

FOLLOW US

WRITE A COMMENT

x