இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராமன், கலையரசன் நடித்துள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தை இன்று முதல் (ஆகஸ்ட் 31) திரையரங்குகளில் காணலாம்.
வைஷ்ணவ் தேஜ், கெட்டிகா ஷர்மா நடிப்பில் 'ரங்கா ரங்க வைபவங்கா' (Ranga Ranga Vaibhavanga) தெலுங்கு படம் செப்டம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஃபஹத் பாசில் தயாரிப்பில் திலீஷ் போத்தன், பாசில் ஜோசப், இந்திரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'பல்து ஜான்வர்' (Palthu Janwar) மலையாள படத்தை செப்டம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் காணலாம்.
நேரடி ஓடிடி ரிலீஸ்: சேகர் கங்கனாமோனி இயக்கத்தில் நந்தினி ராய், நோயல் சென் நடித்துள்ள 'பஞ்சதந்திர காதலு' (Panchatantra Kathalu) திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் (ஆகஸ்ட் 31) இன்று வெளியாகியுள்ளது. அபர்ணா பாலமுரளி, நீரஜ் மாதவ் நடிப்பில் சார்லி டேவிஸ் இயக்கியிருக்கும் 'சுந்தரி கார்டன்ஸ்' திரைப்படம் சோனி லிவ் ஓடிடியில் வரும் செப்டம்பர் 2-ம் தேதி நேரடியாக வெளியாகிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: இயக்குநர் டீகே இயக்கத்தில் வைபவ் நாயகனாக நடித்த 'காட்டேரி' திரைப்படம் செப்டம்பர் 2-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. என்.ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் கடந்த ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'மை டீயர் பூதம்' திரைப்படம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கிச்சா சுதீப் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக 'விக்ராந்த் ரோணா' ஜீ5 தளத்தில் செப்டம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
வெப் சீரிஸ்: செப்டம்பர் 2-ம் தேதி 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்' (lord of the rings the rings of power) இணைய தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. லிட்டில் வூமன் கொரியன் வெப்சீரிஸை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் செப்டம்பர் 3-ம் தேதி முதல் காணலாம்.
WRITE A COMMENT