வைபவ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற ‘காட்டேரி’ திரைப்படம் செப்டம்பர் 2-ம் தேதி ஓடிடி தளதிதல் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் டீகே இயக்கத்தில் வைபவ் நாயகனாக நடித்த 'காட்டேரி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், 'லொள்ளு சபா' மனோகர், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருந்த இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 'காமெடி - ஹாரர்' பாணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் 'காட்டேரி' திரைப்படம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT