நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான 'குலுகுலு' திரைப்படம் ஆகஸ்ட் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'மேயாத மான்', 'ஆடை' படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடித்த திரைப்படம் 'குலுகுலு'. சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படம், கடந்த ஜூலை 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடைய எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
A gulu gulu entertainment on the way!https://t.co/6dlX0NOf2o#SunNXT #GuluGulu #Santhanam #AthulyaChandra #NamitaKrishnamurthy #RathnaKumar #SanthoshNarayanan #GuluGuluOnSunNXT @iamsanthanam @MrRathna @Music_Santhosh @namikay1 @athulya_chandra pic.twitter.com/sgHFqt55t5
— SUN NXT (@sunnxt) August 25, 2022
WRITE A COMMENT