‘டைரி’ முதல் ‘ரிபீட்’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘டைரி’ முதல் ‘ரிபீட்’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள 'லைகர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் அருள் நிதி நடித்துள்ள 'டைரி' படத்தை நாளை (ஆகஸட் 26) திரையரங்குகளில் காணலாம். ரத்திஷ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள 'தீர்ப்பு' (Theerppu) மலையாள படம் இன்று வெளியாகியுள்ளது. சஞ்சிதா பூனாச்சா நடிப்பில் களாபுரம் (Kalapuram) தெலுங்கு திரைப்படம் (ஆகஸட் 26) நாளை திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

'த்ரி தௌசண்ட் இயர்ஸ் ஆஃப் லாங்கிங்' (Three Thousand Years Of Longing) ஹாலிவுட் படமும், 'டிராகன் பால் சூப்பர்: சூப்பர் ஹீரோ (Superhero) ஹாலிவுட் படமும் நாளை வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான நவீன் சந்திரா, மதுபாலா நடிப்பில் 'ரிபீட்' (Repeat) படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அசோக் தேஜா இயக்கத்தில் வசிஷ்டா சிம்ஹா நடித்துள்ள 'ஒடேலா ரயில் நிலையம்' (Odela Railway Station) தெலுங்கு படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்' ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. விஜய்பிரசாத் இயக்கத்தில் சதீஷ் நின்சாம் நடித்துள்ள 'பெட்ரோமாக்ஸ்' கன்னட திரைப்படம் வூட் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

வெப் சீரிஸ்: 'டெல்லி க்ரைம் சீசன் 2' வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும், 'இம்மெச்சூர்' அமேசான் ப்ரைம் தளத்திலும் நாளை வெளியாகின்றன. 'ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்' (ஹாட்ஸ்டார்) மற்றும் 'தி வாக்கிங் டெட் சீசன் 11' (நெட்ஃப்ளிக்ஸ்) இரண்டு தொடர்களும் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகின.

FOLLOW US

WRITE A COMMENT

x