ஹாலிவுட் டிவி தொடர்களில் மிகவும் பிரபலமான ஃபேன்டஸி தொடராக அறியப்படுகிறது 'கேம் ஆப் த்ரோன்ஸ்’. 2011-ஆம் ஆண்டு ஒளிபரப்பட்ட இத்தொடர் 2019-ஆம் ஆண்டு முடிவடைந்தது. 8 சீசன்களாக வெளி வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் 73 எபிசோட்களைக் கொண்டது.
இத்தொடரில் எமிலி க்ளார்க், கிட் ஹரிங்டன், லீனா ஹெடே ஆகியோர் நடத்திருத்தினர். 7 அரசாங்கங்களுக்கு இடையே நடக்கும் ஆட்சி அதிகாரம்தான் கதையின் கரு. இத்தொடருக்கு ஈரானிய - ஜெர்மன் இசையமைப்பாளர் ரமின் ஜவாடி இசையமைத்திருந்தார்.
’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ முடிவடைந்தபோது லட்சக்கணக்கான ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். எனினும் அதே நிறுவனம் இதே பாணியில் மீண்டும் ஃபேன்டஸி தொடரை எடுக்கவுள்ளது என்பதை அறிந்து அதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அத்தொடரின் அறிவிப்பு வெளியானது.
’கேம் ஆப் த்ரோன்ஸ்’-க்கு முன்னர் நடந்த சம்பவங்களை வைத்து ப்ரீக்வலாக ’ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ தொடர் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு பலத்த வரவேற்பையும் பெற்றது.
இந்தச் சூழலில் ’ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ தொடரின் முதல் எபிசோட் நேற்று வெளியானது. மேட் ஸ்மித், மில்லி அல்காக் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முதல் எபிசோட் வெளியானதைத் தொடர்ந்து அத்தொடர் குறித்த மீம்க்ஸ்கள் சமூக வலைதளங்களில் நிறைந்துள்ளது. திரைப்படத்துக்குரிய தரத்துடன் ’ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ உள்ளது என பலரும் பதிவிட்டு வருகின்றனர். ’ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ ஹெச்பிஓ சேனலிலும், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வாரம் வாரம் ஒளிப்பரப்பாகவுள்ளது.
WRITE A COMMENT