‘விருமன்’ முதல் ‘கார்கி’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘விருமன்’ முதல் ‘கார்கி’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள 'விருமன்' திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 12) திரையரங்குகளில் வெளியாகிறது.

வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் 'கடமையை செய்' படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம்.

ஆமீர்கான், கரீனாகபூர் நடிப்பில், 'பாரஸ்ட் கம்ப்'ஹாலிவுட் படத்தின் தழுவலான 'லால் சிங் சத்தா' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

லால் சிங் சத்தா விமர்சனத்தைப் படிக்க : லால் சிங் சத்தா Review: ஒரு க்ளாசிக் படைப்பின் மண்ணுக்கேற்ற மாற்றம் மனதை வென்றதா?

அக்‌ஷய் குமார், பூமி பெட்னேகர், சாடியா கதீப் நடித்துள்ள 'ரக்‌ஷா பந்தன்' திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

குஞ்சாகோ போபன், காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நா தான் கேஸ் கொடு' மலையாள படமும் தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நிக்கில் சித்தார்த், அனுபமா பரமேஸ்வர் நடித்துள்ள 'கார்த்திகேயா 2' தெலுங்கு திரைப்படம் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: அமலா பால் தயாரித்து நடித்துள்ள 'கடாவர்' படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

மஹத், தேவிகா, மானசா நடித்துள்ள 'எமோஜி' படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியிடப்பட உள்ளது.

ஜே.ஜே.பெர்ரி இயக்கத்தில் ஜேமி ஃபாக்ஸ் நடித்துள்ள 'டே ஷிஃப்ட்' திரைப்படத்தை நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம்.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: டாப்சி நடிப்பில் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட 'சபாஷ் மிது' நெட்ஃப்ளிக்ஸில் நாளை வெளியாகிறது.

கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்த 'கார்கி' சோனி லிவ் ஓடிடி தளத்திலும், நாக சைதன்யாவின் 'தேங்க்யூ' அமேசான் ப்ரைமில் நாளை வெளியிடப்பட உள்ளது.

ஃபஹத் பாசில் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'மலையன் குஞ்சு'படத்தை தற்போது அமேசான் ப்ரைமில் காணலாம்.

லிங்குசாமி இயக்கத்தில் ராம்போத்தினி, கீர்த்தி ஷெட்டி நடித்த 'தி வாரியர்' படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

வெப் சீரிஸ்: 'ஐ எம் குரூட்' (ஆங்கிலம்) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும், 'லாக் அண்ட் கீ' 3-வது சீசன் (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியாகியுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x