ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் தவறவிடக் கூடாத 2 படங்கள்


ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் தவறவிடக் கூடாத 2 படங்கள்

ஓடிடியில் இந்த வாரம் முக்கியமான இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அதன் ஓடிடி ரிலீஸ் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

மகேஷ்நாராயணன் எழுத்தில் சஜிமோன் பிரபாகர் இயக்கி, பஹத் பாசில் நடித்திருக்கும் மலையாள திரைப்படம் 'மலையன் குஞ்சு'. சர்வைவல் ட்ராமா பாணியில் உருவான இப்படம் கடந்த ஜூலை 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மனித உணர்வுகளை நுணுக்கமாக பேசும் இப்படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில், ஃபஹத் ஃபாசிலின் பிறந்த நாளையொட்டி இன்று படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையன் குஞ்சு விமர்சனம் : முதல் பார்வை | மலையன்குஞ்சு - மலைக்கவைக்கும் ஃபஹத், வலி கடத்தும் ரஹ்மான் மற்றும் பல..!

கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த படம் 'கார்கி'. காளி வெங்கட், ஆர்.எஸ்.சிவாஜி, லிவிங்க்ஸ்டன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கடந்த ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிறுமிகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளை அழுத்தமாக பேசும் இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

கார்கி விமர்சனம் : முதல் பார்வை | கார்கி - சாய் பல்லவியின் அட்டகாச நடிப்பில் ஓர் அழுத்தமான ஆக்கம்!

படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x