The Sandman - நெட்ஃப்ளிக்ஸில் ஹிட்டடிக்கும் புதிய வெப் சீரிஸ் - ஓர் அறிமுகம்


The Sandman - நெட்ஃப்ளிக்ஸில் ஹிட்டடிக்கும் புதிய வெப் சீரிஸ் - ஓர் அறிமுகம்

கலிபோர்னியா: நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 'தி சாண்ட் மேன்' (The Sandman) எனும் இணையத் தொடர் இன்று (ஆகஸ்ட் 5) வெளியாகி உள்ளது. இந்த தொடர் இப்போது இணைய வெளியில் பிசியாக இயங்கி வரும் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. இந்தத் தொடர் குறித்த ஓர் அறிமுகம் இங்கே…

மொத்தம் 10 அத்தியாயங்களைக் கொண்ட தொடராக இது வெளிவந்துள்ளது. 6 இயக்குநர்கள் இதில் பணியாற்றி உள்ளனர். இயக்குநர் ஜேமி சைல்ட்ஸ் அதிகபட்சமாக 4 அத்தியாயங்களை இயக்கியுள்ளார்.

கடந்த 1989-1996 காலகட்டத்தில் நீல் கேமென் (Neil Gaiman) எழுதிய ‘தி சாண்ட் மேன்’ காமிக் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த இணையத் தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை டிசி காமிக்ஸ் காமிக் புத்தகமாக அப்போது வெளியிட்டிருந்தது. இப்போது டிசி என்டர்டெயின்மென்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன் ஸ்டுடியோவும் இணைந்து இந்த வெப் சீரிஸை தயாரித்துள்ளன.

இந்தத் தொடரில் பிரதான கதாபாத்திரத்தில் டாம் ஸ்டர்ரிட்ஜ் நடித்துள்ளார். கிறிஸ்ட்டி, பாய்ட் ஹோல்ப்ரூக், கிர்பி ஹோவெல்-பாப்டிஸ்ட், மேசன் அலெக்சாண்டர் பார்க் என பலரும் இதில் நடித்துள்ளனர். இந்தத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும் சுமார் 37 முதல் 54 நிமிடங்களை கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஃபான்டஸி டிராமா ஜானரில் இந்தத் தொடர் வெளிவந்துள்ளது. விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை இந்தத் தொடர் பெற்றுள்ளது. ‘தி சாண்ட் மேன்’ கனவு உலகத்திற்கு செல்ல விரும்புபவர்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இதனை காணலாம்.

FOLLOW US

WRITE A COMMENT

x