‘குருதி ஆட்டம்’ முதல் ‘விக்டிம்’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘குருதி ஆட்டம்’ முதல் ‘விக்டிம்’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: '8 தோட்டாக்கள்' பட புகழ் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா,பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'குருதி ஆட்டம்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜெய், அதுல்யா நடிப்பில் உருவாகியுள்ள 'எண்ணித் துணிக' தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, ரைசா வில்சன், வரலட்சுமி நடித்துள்ள 'பொய்க்கால் குதிரை' நாளை வெளியாகிறது.

வைபவ், வரலட்சுமி சரத்குமார், அத்மிகா நடித்துள்ள 'காட்டேரி' நாளை வெளியிடப்பட உள்ளது. துல்கர் சல்மான்,ராஷ்மிகா மந்தன்னா, மிருனாள் தாக்கூர் நடித்துள்ள 'சீதா ராமம்' தெலுங்கு படமும் நாளை வெளியாகிறது.

டேவிட் லிட்ச் இயக்கத்தில் பிராட் பிட் நடித்த 'புல்லட் ட்ரெய்ன்' ஹாலிவுட் படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம்.

நேரடி ஓடிடி ரிலீஸ்: பா.ரஞ்சித், வெங்கட்பிரபு, எம்.ராஜேஷ், சிம்பு தேவன் இயக்கியுள்ள 'விக்டிம்' ஆந்தாலஜி படம் நாளை சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஆலியா பட், விஜய் வர்மா நடித்துள்ள 'டார்லிங்க்ஸ்' படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: 'எருமசாணி' யூடியூப் புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'டி ப்ளாக்'திரைப்படம் அமேசான் ப்ரைமில் நாளை ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகியுள்ளது.

சாஜி கைலாஷ் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்த 'கடுவா' மலையாள படம் அமேசான் ப்ரைமில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிம்பு, ஹன்சிகா நடித்த 'மஹா' திரைப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் நாளை முதல் காணலாம்.

வெப் சீரிஸ்: அன்னு கபூர், பானு உதய் நடித்துள்ள க்ராஷ் கோர்ஸ் (Crash Course) இந்தி வெப்சீரிஸ் அமேசான் ப்ரைமில் நாளை வெளியிடப்பட உள்ளது.டாம் ஸ்டர்ரிட்ஜ் நடித்துள்ள 'தி சான்ட் மேன்' (The Sandman) நெட்ஃபிளிக்ஸில் தற்போது வெளியாகியுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x