மலையாளம் பேசும் விஜய் சேதுபதி - 19(1)(a) பட டீசர் வெளியீடு


மலையாளம் பேசும் விஜய் சேதுபதி - 19(1)(a) பட டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் இயக்குநர் இந்து இயக்கத்தில் ’19(1)(a)’ படத்தின் டீசர் வெளியானது.

19(1)(a) படத்தை ஆன்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளர்.

அறிமுக இயக்குநர் இந்து இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்தின் டீசரில் வசனங்கள் பெருமளவு இடம்பெறவில்லை. விஜய் சேதுபதி, நித்யா மேனன் வரும் பிராதானக் காட்சிகளை இசை மூலமே கடத்தி இருக்கிறார்கள். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

FOLLOW US

WRITE A COMMENT

x