இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படமான 'இரவின் நிழல்' திரைப்படம் நாளை (ஜூலை 15) திரையரங்குகளில் வெளியாகிறது. | வாசிக்க > திரை விமர்சனம்: இரவின் நிழல் |
சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'கார்கி' திரைப்படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம்.
பிரபு தேவா நடித்துள்ள, 'மை டீயர் பூதம்' படம் நாளை வெளியாகிறது.
தெலுங்கில் ராம் பொத்தினி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான 'தி வாரியர்' படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மலையாளத்தில் வெளியான பஹத் பாசிலின் 'டிரான்ஸ்' திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு 'நிலை மறந்தவன்' என்ற பெயரில் நாளை வெளியாகிறது.
டாப்சி நடிப்பில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட 'சபாஷ் மிது' ஹிந்தி திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: ஜிதேந்திர குமார், அருஷி ஷர்மா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜாதுகர்' (Jaadugar) இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியிடப்பட உள்ளது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் நாளை முதல் காணமுடியும்.
சத்யராஜ், ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'வீட்ல விசேஷம்' திரைப்படம் ஜீ5 தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
டோவினோ தாமஸ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'வாஷி' மலையாள படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 17-ம் தேதி ரீலிசாகிறது.
சத்யதேவ் காஞ்சரானா நடிப்பில் உருவான 'கோட்சே' தெலுங்கு படமும் நெட்ஃப்ளிக்ஸில் 17-ம் தேதி வெளியாகிறது.
வெப் சீரிஸ்: 'பெட்டர் கால் சால்' தொடரின் 6-வது சீசனின் இரண்டாவது பாகம் கடந்த ஜூலை 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.
'கர் சாத் ஹை' (Ghar Set Hai) இந்தி இணைய தொடர் யூடியூப் தளத்தில் நாளை காணக்கிடைக்கும்.
WRITE A COMMENT