இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவான 'கடுவா' மலையாள படம் திரையரங்குகளில் இன்று (ஜூலை 7) வெளியாகியுள்ளது.
யோகிபாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பன்னிக்குட்டி' திரைப்படம் நாளை (ஜூலை 8) வெளியாகிறது.
தவிர, யாஷிகா ஆனந்தின் 'பெஸ்டி', சோனியா அகர்வால் நடித்துள்ள 'கிராண்ட்மா' திரைப்படங்களை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம். வெங்கடேஸ்வரன் குப்புசாமி இயக்கியுள்ள 'பாரின் சரக்கு', எல்.எஸ்.பிரபுவின் 'படைப்பாளன்' திரைப்படங்களும் நாளை வெளியாகிறது.
க்ரிஸ் ஹேம்ஸ்வொர்த், கிறிஸ்டியன் பேல் நடித்துள்ள 'தோர்; லவ் அண்ட் தண்டர்' ஹாலிவுட் படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
வித்யூத் ஜமாலின் 'குதா ஹாஃபிஸ் சேப்டர் 2: அக்னி பரிக்ஷா' (Khuda Haafiz Chapter II: Agni Pariksha) படத்தை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.
நேரடி ஓடிடி ரிலீஸ்: மார்டன் லவ் ஹைதராபாத் (Modern Love Hyderabad)என்ற தெலுங்கு ஆந்தாலஜி படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
டோவினோ தாமஸின் 'டீயர் ஃப்ரண்ட்' மலையாள திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 10-ம் தேதி வெளியாகிறது.
நானி, நஸ்ரியா நடித்த 'அடடே சுந்தரா' திரைப்படமும் அதே நாளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
நிதின் லூகோஸ் இயக்கத்தில் 'பக்கா தி ரிவர் ஆஃப் ப்ளட்' Paka (River of Blood மலையாள படம் இன்று சோனிலைவ் ஓடிடியிலும், மது குட்டி இயக்கத்தில் உருவான குஞ்செல்தோ (Kunjeldho) மலையாளப் படம் ஜீ5 தளத்திலும் நாளையும் வெளியாக உள்ளது.
வெப்சீரிஸ் : இந்தி இணையத்தொடரான 'பெட் ஸ்டோரிஸ்' (bed stories) இணையதொடர் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
WRITE A COMMENT