'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4'-ன் இரண்டாவது வால்யூம் நேற்று வெளியானபோது, அதிக அளவு பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்குள் நுழைந்ததால், தளமே முடங்கியது. இதனால் சில நாடுகளில் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4-ன் முதல் வால்யூம் கடந்த மே மாதம் 27-ம் தேதி 7 எபிசோடுகளாக வெளியானது. இதையடுத்து இதன் இரண்டாவது வால்யூம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரண்டு எபிசோடுகள் வெளியானது ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீசன் 4-ன் இரண்டாவது வால்யூம். இதனைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இதற்கு காரணம், இந்த வால்யூமுடன் சீசன் நான்கு முடிவடையவுள்ளது. இதனால், இரண்டாவது வால்யூமை காண வெறிகொண்டு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு நேரத்தில் ஏராளமான பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நுழைந்ததால், அதன் சர்வர் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவிக்க நெட்ஃப்ளிக்ஸ் மறுத்துவிட்டது. தொடர்ந்து இந்த சிக்கலும் தீர்க்கப்பட்டுவிட்டது. ஆர்வத்துடன் இருந்த ரசிகர்கள் பலர், உடனடியாக ட்விட்டரில் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். "நான் ஒரு புத்தாண்டை வரவேற்பது போல கவுண்டன் சொல்லிக்கொண்டிருந்தேன். இறுதியில் அது நெட்ஃபிக்ஸின் #ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் செயலிழக்க சொன்னதுபோல ஆகிவிட்டது'' என்று ஒரு ரசிகர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
''ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 4'' இணைய தொடர் நெட்ஃபிளிக்ஸின் மிகவும் பிரபலமான ஆங்கில தொடர்களில் ஒன்றாக மாறி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. சீசன் 4 வெளியான முதல் மூன்று வாரங்களில் 781.04 மில்லியன் மணிநேரம் பார்வைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
I did not just count down the seconds like it’s New Years for Netflix to crash #StrangerThings pic.twitter.com/uP6Vylac6p
— idk (@squidwardsprof1) July 1, 2022
WRITE A COMMENT