இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'யானை' திரைப்படம் நாளை (ஜூலை 1) ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதேபோல அருள்நிதி நடிப்பில் யூடியூப் புகழ் 'எருமசாணி' விஜய் குமார் இயக்கியுள்ள 'டி ப்ளாக்' படமும் நாளை ரீலிசாகிறது.
மாதவன் நடிப்பில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' திரைப்படம் நாளை வெளியாகிறது.
தவிர, கோபிசந்த், ராக்சி கண்ணா நடித்த 'பக்கா கமர்ஷியல்' தெலுங்கு படமும், நூரின் ஷெரீப், ராகுல் மாதவ் நடிப்பில் 'சாண்டாகுரூஸ்' மலையாளபடமும் வெளியாகிறது. கைல் பால்டா இயக்கத்தில் 'மினியன்ஸ்: தி ரைஸ் ஆஃப் க்ரு' ஹாலிவுட் படம் இன்று வெளியாகியுள்ளது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: மார்ட்டின் சோஃபிடல் இயக்கத்தில் உருவான 'ப்ளாஸ்டட்' (Blasted)படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சதீஷ் நீனாசம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 'டீயர் விக்ரம்' கன்னட படம் வூட் (voot) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அயுஷ்மான் குர்ரானா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'அனேக்' ஹிந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. புகழ் மகேந்திரன், நாசர், மு.ராமசாமி நடித்த 'வாய்தா' திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காண முடியும்.
ராணா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'விராட்ட பருவம்' படத்தை நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். அக்சய்குமார் நடிப்பில் வரலாற்று கதையை மையமாக கொண்டு உருவான 'சாம்ராட் பிருத்விராஜ்' படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. விஜய் பாபு, ரஜிஷா வில்சன் நடித்த 'கீடம்' மலையாள படம் ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது. அதேபோல கங்கனா ரணாவத்தின் 'தாகத்' படத்தை நாளை ஜீ5 தளத்தில் காணலாம்.
வெப்சீரிஸ் : ஸ்டேரஞ்சர்ஸ் திங்க்ஸ் சீசன் 4 (stranger things season 4) நெட்ஃப்ளிக்ஸில் நாளை காணக்கிடைக்கும். 'தி டெர்மினல் லிஸ்ட்' நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
WRITE A COMMENT