இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் இன்று (ஜூன் 24) திரையரங்குகளில் வெளியானது. வாசிக்க > முதல் பார்வை | மாமனிதன் - டைட்டிலின் ஆன்மாவுக்கு நியாயம் சேர்க்க ‘விரும்பிய’ படைப்பு
அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'வேழம்' திரைப்படமும், சுந்தர் சி, ஜெய் நடிப்பில் உருவான 'பட்டாம்பூச்சி' திரைப்படத்தையும் இன்று முதல் திரையரங்குகளில் காணலாம்.
அதேபோல சிபி சத்யராஜின் 'மாயோன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
தவிர, வருண் தவான், அனில்கபூர், கியாரா அத்வானி நடிப்பில் 'ஜக்ஜக் ஜீயோ' (Jugjugg Jeeyo) திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஸ்காட் டெரிக்சன் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள 'தி ப்ளாக் போன்' (the black phone), மற்றும் அமெரிக்க பாடகரான எல்விஸ் பிரெஸ்லியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் 'எல்விஸ்' (elvis)ஆகிய இரண்டு ஹாலிவுட் படங்கள் வெளியாகியுள்ளன.
நேரடி ஓடிடி ரிலீஸ்: மலையாளத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான 'பாரன்சிக்' (FORENSIC) திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் அதேபெயரில் உருவாகியிருக்கிறது. ஜானி கன்னா, மேகா ஷர்மா நடித்துள்ள இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தவிர, தி மேன் ஃப்ரம் டொரண்டோ (The Man from Toronto) மற்றும் லவ் அண்ட் கெலட்டோ (Love & Gelato) ஆகிய இரண்டு ஹாலிவுட் படங்களும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சோனி லைவ் ஓடிடி தளத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வெளியாகியுள்ளது.
மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த தெலுங்கு படமான 'சர்காரு வாரி பாட்டா' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'டாக்டர் ஸ்ட்ரேஞ் 2' ஹாலிவுட் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. சந்தோஷ் பிரதாப் நடித்து திரையரங்குகளில் வெளியான 'கதிர்' திரைப்படம் ஆஹா ஒடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானியின் 'பூல் புலையா 2' (Bhool Bhulaiyaa 2) நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. தவிர, ஆசிஃப் அலி நடித்த 'குட்டாவும் சிக் ஷேயும்' (Kuttavum Shikshayum) நெட்பிளிக்ஸ் தளத்தில் காண கிடைக்கிறது.
வெப்சீரிஸ்: 'அம்ப்ரெல்லா அகாடமி' (The Umbrella Academy) சீசன் 3 நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்ரத் (avroth) ஹிந்தி வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் சோனிலைவ் தளத்தில் வெளியாகியுள்ளது.
WRITE A COMMENT