ஜூலை 8-ல் ஓடிடியில் வெளியாகிறது 'விக்ரம்'?


ஜூலை 8-ல் ஓடிடியில் வெளியாகிறது 'விக்ரம்'?

ஜூலை 8-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் கமலின் 'விக்ரம்' திரைப்படம் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. அனிருத் இசையில் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படம், தமிழ் நாட்டில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 'பாகுபலி 2' படத்தின் வசூல் சாதனையை 'விக்ரம்' முறியடித்தது.

உலகம் முழுவதும் ரூ.370 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமை ரூ.98 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ஜூலை 8-ம் தேதி முதல் ஓடிடியில் 'விக்ரம்' படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

WRITE A COMMENT

x