‘வீட்ல விசேஷம்’ முதல் ’ஓ2’ வரை:  தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


‘வீட்ல விசேஷம்’ முதல் ’ஓ2’ வரை:  தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: நாளை (ஜூன் 17) ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள 'வீட்ல விசேஷம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இது கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான 'பதாய் ஹோ' படத்தின் மறு ஆக்கமாக தமிழில் வெளியாகிறது.

அடுத்து, ராணா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள 'விரட்டபரவம்' (virata parvam) மற்றும் சத்யதேவ் நடிப்பில் உருவான 'கோட்சே' ஆகிய இரண்டு தெலுங்கு படங்கள் நாளை வெளியாக உள்ளது. மலையாளத்தில் டோவினோ தாமஸ் - கீர்த்திசுரேஷ் நடித்த 'வஷி' (vaasi) திரைப்படம் வெளியாகிறது.

அபிமன்யு தசானி நடிப்பில் உருவாகியுள்ள 'நிகம்மா' (Nikamma),'இட்டு சி பாத்' Ittu Si Baat ஆகிய இரண்டு ஹிந்தி படங்களும் வெளியாகிறது. இது தவிர, லைட் இயர் (light year) என்ற ஹாலிவுட் அனிமேஷன் படமும் வெளியிடப்பட உள்ளது.

ஓடிடி ரிலீஸ் : நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ2' திரைப்படம் நாளை முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கும். | வாசிக்க > முதல் பார்வை | ஓ2 - விறுவிறு திரைக்கதையில் வீரியம் மிக்க மெசேஜ்!

தியேட்டருக்குப் பின்னான ஓடிடி ரிலீஸ் படங்கள்: திரையரங்குகளில் வெளியான சித்தந்த் குப்தாவின் 'ஆப்ரேஷன் ரோமியோ' திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜூன் 18-ம் தேதி வெளியாகிறது.

வெப்சீரிஸ் : ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிப்பில் புஷ்கர் காயத்ரி திரைக்கதை எழுதியுள்ள 'சுழல்' வெப்சீரிஸ் நாளை முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. பிரசன்னா, அபர்ணா பாலமுரளி, ரெஜினா நடித்த 'பிங்கர் டிப்' வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x