ஸ்குவிட் கேம் 2-வது சீசனை உறுதி செய்தது நெட்ஃபிளிக்ஸ் 


ஸ்குவிட் கேம் 2-வது சீசனை உறுதி செய்தது நெட்ஃபிளிக்ஸ் 

தென்கொரிய இணையத் தொடரான 'ஸ்குவிட் கேம்' தொடரின் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளதை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் உறுதி செய்துள்ளது. இதனால் 'ஸ்குவிட் கேம்' ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது தென்கொரிய இணைய தொடரான 'ஸ்குவிட் கேம்'. ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய இந்த தொடர் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு ஆழமான பல கருத்துகளை உள்ளடக்கி விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது. இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்தத் தொடரின் இரண்டாம் சீசன் வெளியாக உள்ளதை சிறிய டீசர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ்.

மேலும், இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'ஸ்குவிட் கேம் தொடரின் முதல் சீசனை வெளியிடுவதற்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களால் கண்டு களிக்கப்பட்ட தொடராக 'ஸ்குவிட் கேம்' மாறியதற்கு வெறும் 12 நாட்களே தேவைப்பட்டன. 'ஸ்க்விட் கேம்' தொடரின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற ரசிகர்களால் கொண்டாப்பட்டேன். தொடரை பார்த்து ரசித்தற்கு நன்றி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரின் கதாநாயகன் சியோங் கி-ஹுன் (லீ ஜங்-ஜே) மற்றும் முகமூடி அணிந்த எதிரியான ஃப்ரண்ட் மேன் (லீ பியுங்-ஹன்) இருவரும் இரண்டாவது சீசனில் திரும்பி வருவார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x