அபுதாபி: IIFA 2022 விழாவில் தமிழ் மொழியில் உருவாகியுள்ள வெப் சீரிஸான 'சுழல்' குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோ.
அபுதாபியில் நடைபெற்று வரும் 22-வது IIFA (சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள்) விழாவில் தம்பதியரான புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி, உருவாக்கி உள்ள ஒரிஜினல் (அசல்) தமிழ் வெப் சீரிஸான சுழல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர், ஐஸ்வர்யா, ஷ்ரேயா ரெட்டி, பார்த்திபன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். புனைவு கிரைம் த்ரில்லர் ஜானரில் இந்த இணையவழி தொடர் உருவாகி உள்ளது. மொத்தம் 8 எபிசோட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போகும் சிறுமியை குறித்த கதை என தெரிகிறது.
இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஜப்பானிய மொழி, அரபிக் உட்பட பல்வேறு மொழிகளில் இது ஸ்ட்ரீம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளது சுழல்.
ஓடிடி ஸ்ட்ரீமிங் தளம் மூலம் உலக அளவில் உள்ள மக்களிடம் படிப்பாளிகள் தங்களது கதைகளை சொல்ல முடிகிறது. உலக மக்களிடையே இந்திய படைப்புகளை அடுத்த கட்டத்திற்கு பரவலாக கொண்டு செல்ல இது நிச்சயம் உதவும் என தெரிவித்துள்ளனர் புஷ்கர் - காயத்ரி.
WRITE A COMMENT