இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: நாளை (ஜூன் 3) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'விக்ரம்' திரைப்படம் வெளியாகிறது.
அக்ஷய் குமார் நடிக்கும் 'பிருத்விராஜ்' இந்தி படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் ஸ்ரீசரண் பகலா இயக்கத்தில் அதிவி சேஷ் நடிக்கும் 'மேஜர்' தெலுங்கு படத்தை நாளை முதல் திரையில் காணலாம். ஹக் போன்வில்லே நடிப்பில் உருவாகியுள்ள 'டவுன்டன் அபே: ஏ நியூ ஏரா' என்ற ஆங்கில படமும் நாளை வெளியாகிறது.
தியேட்டருக்குப் பின்னான ஓடிடி ரிலீஸ் : பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வெளியான 'ஜன கண மன' மலையாள திரைப்படம் இன்று (02.06.2022) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் வெளியான 'கூகுள் குட்டப்பா' திரைப்படத்தை நாளை முதல் ஆஹா ஓடிடி தளத்தில் காண முடியும்.
யஷ் நடிப்பில் பிரமாண்ட வெற்றியைப் பெற்ற 'கேஜிஎஃப் 2' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியிடப்பட உள்ளது.
விஷ்வக் சென் நடிப்பில் உருவான 'அசோக வனம் லோ அர்ஜுன கல்யாணம்' தெலுங்கு படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஓடிடி ரிலீஸ் : ஹியர் டுடே நெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது.
ஓடிடியில் வெளியாகும் வெப்சீரிஸ்கள் : தி பாய்ஸ் சீசன் 3 ( அமேசான் ப்ரைம்), 9 ஹவர்ஸ் (டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்) ஆஷ்ரம் சீசன் 3 (எம்எக்ஸ் ப்ளேயர்) உள்ளிட்டவை இந்த வாரம் வெளியாக உள்ளன.
WRITE A COMMENT