பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள 'ஃபிங்கர்டிப்' இணையத் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது 'ஃபிங்கர்டீப்' க்ரைம் த்ரில்லர் இணையதளத் தொடர். இந்தத் தொடரில் அக்ஷரா ஹாசன், அஸ்வின், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் தொடரின் வரவேற்பை தொடர்ந்து, இதன் இரண்டாவது சீசன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி மற்றும் ஷரத் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), மாரிமுத்து மற்றும் ஹரிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த இரண்டாவது சீசன் ஜூன் 17, 2022 முதல் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகிறது. டிஜிட்டல் மையமான உலகில் தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளை அடிப்படையாக கொண்டு இந்தக் கதைக்கள் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT