யஷ் நடிப்பில் வெளியான 'கேஜிஎஃப் 2' படம் ஜூன் 3-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியானது 'கேஜிஎஃப் 2' திரைப்படம். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்தப் படம் உலக அளவில் ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரு.130 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து 'கேஜிஎஃப் 3' படமும் உருவாக உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், பிரைம் சந்ததாராக இருந்தாலும், கூடுதல் கட்டணம் செலுத்தினால்தான் இந்தப் படத்தை பார்க்க முடியும் என்ற பிரிவில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது கே.ஜி.எஃப். 2 திரைப்படம் சரியாக 50 நாட்களுக்கு பின்னர் அமேசான் ஓடிடி தளத்தில், சந்தாததார்கள் அனைவரும் இலவசமாக பார்க்கும் வகையில் ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் ஓடிடி தளம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Join Rocky on his journey to rule the world!! #KGF2onPrime, streaming from June 3 pic.twitter.com/m2dAaqxomE
— amazon prime video IN (@PrimeVideoIN) May 31, 2022
WRITE A COMMENT