மே 27-ம் தேதி ஓடிடியில் பிரித்விராஜின் 'ஜன கண மன' மற்றும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான 'சேத்துமான்' விஜய் சேதுபதி நடித்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய மூன்று படங்களும் வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி ராஜ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'ஜன கண மன'. பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தை பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து தயாரித்திருந்தார்.
தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. படம் வெளியாகி 1 மாதம் கழித்து வரும் 27 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ‘ஜன கன மன’ மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
அதே தேதியில், விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி எனும் சிறுகதை "சேத்துமான்" எனும் பெயரில் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்க அறிமுக இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். புனே சர்வதேசத் திரைப்பட விழா, கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற இப்படம் சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தப் படம் வரும் மே 27 ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
WRITE A COMMENT