சான் பிரான்சிஸ்கோ: "நிறுவனம் வழங்கும் கன்டென்ட் பிடிக்கவில்லை என்றால் ஊழியர்கள் தாராளமாக வேலையை விட்டு வெளியேறலாம்" என ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், உலகம் முழுவதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெப் சீரிஸ், ஆவணப் படங்கள், திரைப்படங்கள் போன்ற கன்டென்டுகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. கடந்த 1997 முதல் இந்நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டு முறையானது தடாலடியாக உள்ளது.
சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வழிகாட்டு முறைகளை மாற்றியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். நிறுவனம் வழங்கும் கன்டென்ட் ஊழியர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அதையொட்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். கன்டென்ட்டை விரும்பாத ஊழியர்கள் தாராளமாக வேலையை விட்டு வெளியேறலாம் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊழியர்களுடன் 18 மாதங்கள் பேசி, விவாதித்த பிறகே நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாக அந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்கும் நோக்கில் தங்கள் தளத்தில் புதிய அம்சங்களை கொண்டு வரும் முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அறிவித்திருந்தது போல பயனர்கள் தங்களது பாஸ்வேர்டை அடுத்தவர்களுக்கு பகிர்வதை தடுக்கும் நோக்கில் அதற்கான பணிகளையும் நெட்ஃப்ளிக்ஸ் மேற்கொண்டு வருகிறதாம்.
மறுபக்கம் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மலிவு விலையில் சந்தா கட்டணத்தை அறிமுகம் செய்வது தொடர்பான பணிகளும் நடந்து வருகிறதாம். இதில் விளம்பரங்களுக்கு சப்போர்ட் இருக்கும் எனத் தெரிகிறது.
WRITE A COMMENT