ஒரேநேரத்தில் இரண்டு தளங்கள் - மே11ல் ஓடிடியில் 'பீஸ்ட்' ரிலீஸ்


ஒரேநேரத்தில் இரண்டு தளங்கள் - மே11ல் ஓடிடியில் 'பீஸ்ட்' ரிலீஸ்

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இரண்டு ஓடிடி தளங்களில் படம் வெளியாகவுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' கடந்த 13 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த குற்றச்சாட்டு போன்றவைக்கு மத்தியில் கடந்த சில தினங்களாக 'பீஸ்ட்' படம் மற்றும் பாடல் மேக்கிங் வீடியோக்கள் வெளியாகின. தொடர்ந்து நேற்று முன்தினம் `ஜாலியோ ஜிம்கானா’ பாடலின் வீடியோவும் வெளியானது.

தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 11ம் தேதி இரண்டு ஓடிடி தளங்களில் படம் ரிலீஸாகவுள்ளது. படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஓடிடி தளமான சன் நெக்ஸ்ட்டில் வெளியாகும் அதேநேரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக விஜய் தனது அடுத்த படத்திற்காக ஹைதராபாத் சென்றுள்ள காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன. தனது 66வது படத்தில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இணைந்துள்ளார் விஜய். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமன்னும் ஒப்பந்தம் ஆக்கியுள்ளனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x